August 15, 2018
தண்டோரா குழு
இந்தியாவின் 72-வது ஆண்டு சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.72வது சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் இன்று தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.அதனைத் தொடர்ந்து,செங்கோட்டைக்கு வந்த பிரதமர் மோடி முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
பின்னர் சுதந்திரதின உரையில் பேசிய பிரதமர் மோடி,
“இந்திய சுதந்திரத்திற்காக போராடிய அனைவருக்கும் என் வீரவணக்கம்.இந்த இனிய நாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திரதின வாழ்த்துக்கள்.
உலக அளவில் இந்தியா முன்னேறி வருகிறது.உலகின் 6-வது பொருளாதார நாடாக இந்திய வளர்ந்துள்ளது.பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகள் உறுதி செய்யப்பட்டுள்ளது.அம்பேத்கர் கொடுத்த சட்டம் தான்,நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டுகிறது.
நாட்டின் பல்வேறு இடங்களில் பருவமழை சிறப்பாக பெய்த நிலையில் வெள்ளம் பெருக்கெடுத்து உள்ளது.இயற்கை சீற்றங்களால் பாதிப்பு அடைந்துள்ள மாநிலங்களுக்கு துணை நிற்க வேண்டும்”. இவ்வாறு பேசினார்.