• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை!

December 21, 2017 தண்டோரா குழு

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக டில்லி சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற நீதிபதி சைனி அறிவித்துள்ளார்.

மத்தியில், காங்., தலைமையிலான, ஐ.மு., கூட்டணி ஆட்சியின்போது, 2007 – 2009 வரை, மத்திய தொலை தொடர்புத் துறை அமைச்சராக, தி.மு.க.,வைச் சேர்ந்த, ராஜா இருந்தார். அப்போது, மொபைல் போன் சேவைகளுக்கான, ‘2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு நடந்ததாக, சி.ஏ.ஜி., எனப்படும், மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.இதனால், அரசுக்கு, 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டது.

இதுதொடர்பாக, சி.பி.ஐ., விசாரித்து வந்தது. இந்த ஊழலில் நடந்துள்ள பண மோசடி குறித்து, மத்திய அமலாக்கத் துறை தனியாக விசாரித்தது. இந்த வழக்குகளை, டில்லியில் உள்ள, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற நீதிபதி, ஓ.பி.சைனி விசாரித்து வந்தார்.இந்தாண்டு ஏப்ரலில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்தன.

இதனைத்தொடர்ந்து வழக்கு தொடர்பாக அதிக ஆவணங்களை பரிசீலிக்க வேண்டி இருப்பதால், தீர்ப்பு தேதி ஒத்திவைக்கப்படுவதாக, நீதிபதி சைனி கூறியிருந்தார். இதையடுத்து, கடந்த மாத இறுதியில் நடந்த விசாரணையின்போது, தி.மு.க.,வைச் சேர்ந்த, ராஜா, கனிமொழி ஆகியோர் ஆஜராயினர். ஆனால், தீர்ப்பில் பல ஆவணங்கள் சேர்க்கப்பட வேண்டி இருந்ததால், தீர்ப்பு வழங்குவது தாமதம் ஆனது.

பின்னர், ‘2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும் என நாடே எதிர்பார்த்தது. இதையடுத்து, 2ஜி ஸ்பெக்டரம் முறைகேடு வழக்கில் தீர்ப்பு வரும் டிச.,21ல் காலை 10.30 மணியளவில் வழங்கப்படும் எனவும், தீர்ப்பு எழுதும் பணி முடிவடைந்துவிட்டதாகவும் நீதிபதி சைனி அறிவித்தார்.

இதனால், 2ஜி ஸ்பெக்டரம் முறைகேடு வழக்கில் தீர்ப்பை இன்று நாடே எதிர்பார்த்து இருந்தது. இந்நிலையில் வழக்கில் தொடர்புடைய ராஜா, கனிமொழி உள்ளிட்டோர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

இதனைத்தொடர்ந்து, கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. ஷைனி தீர்ப்பளித்தார்.

அப்போது, 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றசாட்டுகளை சிபிஐ நிரூபிக்க தவறியதால் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி எம்.பி உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து நீதிபதி சைனி தீர்ப்பளித்தார்.

தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து உற்சாக கொண்டாடி வருகின்றனர்.

மேலும் படிக்க