• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டிசம்பர் 12ல் விராட் கோலி – அனுஷ்கா சர்மா திருமணம் ?

December 6, 2017 தண்டோரா குழு

கிரிக்கெட் வீரர் விராட் கோலி – நடிகை அனுஷ்கா சர்மா டிசம்பர் 12ம் தேதி திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கும் பாலிவுட் முன்னணி நடிகை அனுஷ்கா ஷர்மாவுக்கும் கடந்த 2013–ம் ஆண்டு இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது நட்பு வெளிப்பட்டது. பின்னர் இது காதலாக மாறியதாக தகவல்கள் கசிந்தாலும் அதனை இருவரும் தொடர்ந்து மறுத்து வந்தனர். ஆனாலும் விராட் கோலியின் சமூக வலைதள பக்கங்களில் இருவரும் ஜோடியாக இருப்பது போன்ற புகைப்படங்கள் அடிக்கடி வெளியானது. இதையடுத்து இந்த நட்பு தற்போது காதலாக மாறியுள்ளது.

இந்நிலையில், டிசம்பர் 12ம் தேதி விராட் கோலிக்கும் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் இத்தாலியில் திருமணம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக கோலி மற்றும் அவரது நண்பர்கள், உறவினர்கள் இத்தாலி செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. எனினும், இதனை உறுதிபடுத்தும் விதமாக விராட் கோலியின் செயல்கள் அமைந்துள்ளது.

டிசம்பர் மாதத்தில் நடைபெறும் இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இருந்து தனது தனிப்பட்ட காரணங்களுக்காக ஓய்வு தேவை என்று கூறியிருந்தார்.இதனால் இலங்கையுடனான ஒருநாள் போட்டி ரோஹித் சர்மா தலைமையில் நடைப்பெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க