August 4, 2018
கோவையில் மழையின் காரணமாக மூடப்பட்டு இருந்த கோவை குற்றலாம்,இன்று முதல் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது.
கோவை குற்றாலம் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து வனத்துறையினர் உத்தரவிட்டிருந்தனர்.
கோவையில் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் அவ்வப்பொழுது மழை பெய்து வருகிறது.இந்நிலையில் கோவை குற்றாலம் பகுதிகளில்,கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் குற்றாலம் நீர் பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது கனமழை பெய்து வருவதாலும்,பலத்த காற்று வீசி வருவதால் மரங்கள் முறிந்து விழும் அபாயம் இருப்பதன் காரணமாக கோவை குற்றாலம் அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு,தடை விதித்து வனத்துறையினர் உத்தரவிட்டிருந்தனர்.
தற்போது மழையின் அளவு குறைந்துள்ளதால்,சராசரி அளவுக்கு தண்ணீர் வருவதன் காரணமாக இன்று முதல் கோவை குற்றலாத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது.