• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ஸ்ருதியை காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

January 18, 2018 தண்டோரா குழு

கோவையில் திருமணம் செய்து கொள்வதாக கூறி பணம் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ஸ்ருதி உள்ளிட்ட 4 பேரை ஓரு வாரம் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கோவையில் மேட்ரிமோனியல் இணையதளம் மூலம் வரன் பார்த்து திருமணம் செய்து கொள்வதாக கூறி சேலத்தைச் சேர்ந்த மென்பொறியாளர் பாலமுருகனிடம் ரூ 45 லட்சம் பணம் மோசடி செய்ததாக கடந்த 11ம் தேதி நடிகை ஸ்ருதி மற்றும் பிரசன்ன வெங்கடேஷ், சித்ரா, சுபாஷ் ஆகிய 4 பேரை சைபர் கிரைம் காவல் துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் ஸ்ருதி மற்றும் அவரது கூட்டாளிகள் மீது ஏற்கனவே பல்வேறு மோசடி வழக்குகள் இருப்பதும் , பல கோடி ரூபாய் வரை மோசடி செய்து இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட ஸ்ருதி மற்றும் அவரது குடும்பத்தினர் என கூறப்படும் பிரசன்ன வெங்கடேஷ்,சித்ரா, சுபாஷ் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க சைபர் கிரைம் போலீஸார், கோவை மூன்றாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 4 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு மீதான விசாரணை இன்று பிற்பகல் வந்தது.இந்த விசாரணையின் போது போலீஸ் காவலில் 4 பேரையும் அனுப்ப நடிகை ஸ்ருதியின் வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்நிலையில்,கைது செய்யப்பட்ட 4 பேரையும் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க மூன்றாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி வேலுச்சாமி அனுமதி அளித்தார்.மேலும்,விசாரணை முடித்து வரும் 25ம் தேதி மாலை 5 மணிக்கு 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என உத்திரவிட்டார்.இதனையடுத்து 4 பேரையும் அழைத்துசென்ற சைபர் கிரைம் போலீஸார் அவர்களிடம் மோசடி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே ஏற்கனவே கடந்த ஆண்டு ஸ்ருதியால் பாதிக்கப்பட்ட நாமக்கல் பகுதியை சேர்ந்த மென்பொருள் பொறியாளர் சந்தோஷ்குமார் என்பவரும் வழக்கு விசாரணையை பார்க்க வந்திருந்தார்.அப்போது மேட்ரிமோனியல் பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களை கவர்ந்து ஏமாற்றுவதை ஸ்ருதி வாடிக்கையாக கொண்டு இருக்கின்றார் எனவும், இதுவரை 80 லட்ச ரூபாய் வரை தான் ஏமாந்து இருப்பதாகவும், இது தொடர்பாக ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டு வழக்கு நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க