• Download mobile app
30 Apr 2024, TuesdayEdition - 3002
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

20 விநாடி முன்பே சென்றதால், மன்னிப்புக் கேட்ட ஜப்பான் ரயில்வே!

November 17, 2017

ஜப்பானில் சுமார் 2௦ வினாடிகளுக்கு முன்பே ரயில் புறப்பட்டு சென்றதற்காக, அந்நாட்டின் ரயில்வே நிர்வாகம் மன்னிப்பு கேட்டுள்ளது பலருக்கும் ஆச்ச்ரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பான் நாட்டில் உள்ள மினாமி பகுதியிலிருந்து நகரேயாமா பகுதிக்கு காலை 9.44.40 மணிக்கு சுகுபா விரைவு ரெயில் புறப்படுவது வழக்கம். ஆனால் கடந்த செவ்வாய்க்கிழமை(நவ 14) காலை, மினாமி நாகரேயமா ரயில் நிலையத்திற்கு சுகுபா எக்ஸ்பிரஸ் சரியான நேரத்திற்கு வந்தது. அந்த ரயில்நிலையத்திலிருந்து காலை 9:44:40மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் 9:44:20 மணிக்கே புறப்பட்டு சென்றுவிட்டது.

இதையடுத்து, இன்டர்சிட்டி ரயில்வே நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் அந்த நிறுவனம் கூறியிருப்பதாவது: “நவம்பர் 14அன்று, சுகுபா எக்ஸ்பிரஸ்20 வினாடிக்கு முன்பே சென்றுவிட்டது. இதனால், பயணிகள் சந்தித்த சிரமத்திற்கு நாங்கள் மன்னிப்புக் கேட்கிறோம்” என்று தெரிவித்திருந்தது.

மேலும்க,குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாக புறப்பட்ட ரெயிலுக்காக ஜப்பான் ரெயில்வே பயணிகளிடம் மன்னிப்பு கேட்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது

மேலும் படிக்க