May 9, 2018
தண்டோரா குழு
தெற்காசிய அளவில் இலங்கையில் நடந்த தடகள போட்டியில் கோவையை சேர்ந்த கமல்ராஜ் மும்முறை தாண்டுதல் பிரிவில் புதிய சாதனையை படைத்து உள்ளார்.
இலங்கை கொழும்புவில் கடந்த நான்காம் தேதி முதல் 7ம் தேதி வரை மூன்றாவது தெற்காசிய தடகள போட்டிகள் நடைபெற்றது.இந்தியா,நேபால், பாகிஸ்தான், மாலத் தீவுகள், இலங்கை உள்ளிட்ட நாடுகள் பங்கேற்றன.
இந்த போட்டியில் பங்கேற்க இந்தியா முழுவதிலும் இருந்து 68 வீரர்கள், வீராங்கனைகள் தேர்வு பெற்றனர்.தமிழகத்தில் இருந்து எட்டு பேர் அதில் இடம்பெற்று இருந்தனர்.இந்நிலையில் இந்திய அணி 50 பதக்கங்கள் பெற்று இருந்தது. அதில் கோவையை சேர்ந்த தடகள வீரர் கமல்ராஜ் மும்முறை தாண்டுதல் போட்டியில் 16.25 மீட்டர் தூரம் ஓடி புதிய சாதனையை படைத்து உள்ளார்.
இந்நிலையில்,அடுத்த மாதம் ஜப்பானில் நடைபெற உள்ள ஆசிய தடகள போட்டியிலும்,ஜூலை மாதம் பின்லாந்தில் நடைபெற உள்ள ஜூனியர் சர்வதேச தடகள போட்டியிலும் இந்தியா சார்பில் பங்கேற்க கமல்ராஜ் தகுதி பெற்று உள்ளார்.