July 26, 2018
தண்டோரா குழு
கோவையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மதுரைவீரன் என்பவருடைய மகள் அபிராமி.24 வயதான அபிராமி, பிபிஏ முடித்து கோவை ஆவாரம்பாளையம் சாலையில் உள்ள தனியார் விடுதியில் உள்ள விடுதியில் தங்கி பணியாற்றி வந்தார்.இந்நிலையில்,விடுதியில் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.உடலை கைப்பற்றி கோவை பந்தைய சாலை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த வாரம் திண்டுக்கல் சென்றிருந்த போது வீட்டில் மாப்பிள்ளை பார்த்து இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.அபிராமி கோவையில் ஒருவருடன் காதலிப்பதாக கூறப்படுகிறது.திருமணத்திற்கு விருப்பம் இல்லை எனக்கூறி தனது அம்மாவுடன் சண்டை போட்டு கோவைக்கு வந்துள்ளார்.இதனையடுத்து அபிராமி கவலையில் இருந்துள்ளார்.இதனால்,தற்கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.