• Download mobile app
04 Nov 2025, TuesdayEdition - 3555
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பெண்களிடம் தொழில் தொடங்க பணம் பெற்று தருவதாகக் கூறி மோசடி செய்த வாலிபர் கைது !

November 15, 2018 தண்டோரா குழு

கோவையில் பெண்களிடம் தொழில் தொடங்க பணம் பெற்று தருவதாகக் கூறி ரூபாய் 64 லட்சம் மோசடி செய்த வாலிபரை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

கோவை உப்பிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜான் அமலன்(28).இவரும் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்த ரேஷ்மா ஸ்ரீஜா (32) மற்றும் சிலர் இணைந்து நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்துக் கொடுக்கும் நிறுவனம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில்,ரேஷ்மா ஸ்ரீஜா ஜான் அமலன் மீது கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீஸிடம் புகார் மனு அளித்துள்ளார்.அம்மனுவில்,புதிதாக தொழில் தொடங்க திட்டமிட்டிருந்த தன்னிடமும்,தோழி சசிகலா,தாரா,ஷிபா ஆகியோரிடமும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளராக ஜான் அமலன் அறிமுகமானார்.

அப்போது,புதிய தொழில் தொடங்க வெளிநாடு வாழ் இந்தியர் நிதி ரூ.25 கோடி பெற்றுத்தருவதாக கூறி அவர் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் பல்வேறு தவணைகளாக எங்களிடம் ரூ.64 லட்சம் ரூபாயை வாங்கியுள்ளார்.ஆனால்,பல மாதங்களாகியும் எந்த நிதியும் பெற்று தரவில்லை.எங்கள் பணத்தையும் திருப்பி தரவில்லை ஆகையால் நாங்கள் இழந்த பணத்தை பெற்றுத் தரவேண்டும் எனக் கூறியுள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில்,பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு எஸ்.ஐ.நட்ராஜ் நடத்திய விசாரணையில் ஜான் அமலன் மோசடி செய்திருப்பது உறுதி செய்யபட்டது.இதையடுத்து,நேற்று இரவு ஜான் அமலனை போலீசார் கைது செய்தனர்.மேலும்,இவரது நண்பர்களான தில்ஜித்,கிட்டு என்ற சரவணன், புருஷோத்தமன் ஆகியோரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க