• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை அருகே காயம்பட்டு மயங்கி விழுந்த காட்டு யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை

May 8, 2018 தண்டோரா குழு

கோவையில் காயம்பட்டு மயங்கி விழுந்த காட்டு யானைக்கு வன மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்ததை தொடர்ந்து யானை காட்டுக்குள் சென்றது.

கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவார கிராமமான நரசிபுரம் அருகே உடல் நலக்குறைவால் காட்டு யானை ஒன்று சுற்றி வந்தது.கடந்த 10 நாட்களாக வனத்துறையினர் அதனை கண்கானித்து வந்தனர்.இந்நிலையில் கடந்த ஞாயிறன்று இரவு உடல் நலம் குன்றி கீழே விழுந்தது.இதனையடுத்து வன மருத்துவக்குழுவினர் காட்டு யானைக்கு சிகிச்சை அளித்தனர்.மேலும்,ஊசி மூலம் குளுக்கோஸ் ஏற்றப்பட்டு,உணவு மற்றும் தண்ணீர் வழங்கப்பட்டது.

பின்னர் நேற்று காலை உடல் சோர்வு சற்று நீங்கியது.இதனை தொடர்ந்து கிரேன் உதவியுடன் காட்டு யானை தூக்கி நிறுத்தப்பட்டது.வாயில் காயத்திற்க்கும்,உடலில் உள்ள புழுக்களை அகற்ற சிகிச்சை அளிக்கப்பட்டதாக வனத்துறை மருத்துவர் மனோகரன் தெரிவித்தார்.இந்நிலையில் 24 மணி நேர சிகிச்சைக்கு பின் யானை மாலையில் உடல் பலம் பெற்ற பின் கிரேனில் இருந்த கயிறு அவிழ்க்கப்பட்டதையடுத்து யானை மெதுவாக வனப்பகுதிக்குள் சென்றது.

மேலும்,யானையை வனக்குழு ஒன்று தொடர்ச்சியாக கண்காணித்து வருகிறது.இரவு இந்த யானையை அதன் கூட்டத்திடன் சேர்க்கும் வரை கண்காணிப்பு நடைபெறும் என போளுவாம்பட்டி வனச்சரகர் பழனிராஜா தெரிவித்தார்.

மேலும் படிக்க