• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

WHO KILLED RAGU? என வாசகம் எழுதியது யார் போலீசார் விசாரணை

November 28, 2017 தண்டோரா குழு

கோவையில் ரகுபதி உயிரிழப்பு குறித்து சாலையில் WHO KILLED RAGU? என வாசகம் எழுதியது தொடர்பாக 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

கோவையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்காக வைக்கப்பட்ட அலங்கார வளைவில் மோதி மென்பொறியாளர் ரகுபதி கீழே விழுந்தார். அப்போது அவர் மீது லாரி ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைத்தொடரந்து லாரி டிரைவர் மோகனை கைது செய்த காவல்துறையினர் அவரை மத்திய சிறையிலடைத்தனர். இந்நிலையில், விபத்து நடந்த இடத்தில் ஆதங்கத்தில் who killed raghu என வாசகம் எழுதப்பட்டது. இது சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

இதனைத்தொடர்ந்து விபத்து நடந்த இடத்தில் who killed raghu என பெயிண்டால் எழுதியவர்கள் குறித்து பீளமேடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.இந்நிலையில் இரு நபர்கள் மீது காவல்துறையினர் விசாரித்தனர்.இந்த விசாரணையில் அவர்கள் இருவரும் விபத்து நடந்த ஆதங்கத்தில் எழுதியதாக தெரிவித்ததையடுத்து , வழக்கு எதுவும் போடாமல் அனுப்பி வைத்தனர்.

மேலும் படிக்க