• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஐ.ஏ.எஸ் அதிகாரி விஜயகார்த்திகேயனின் “Once Upon An IAS Exam” புத்தகத்தை வெளியிட்ட மோகன் ராஜா

October 29, 2018 தண்டோரா குழு

ஐஏஎஸ் அதிகாரி விஜயகார்த்திகேயன் எழுதிய “Once upon an IAS exam” என்ற புத்தகத்தை இயக்குநர் மோகன் ராஜா வெளிட்டுள்ளார்.கோவை மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன் எழுதிய “Once upon an IAS exam” என்ற புத்தகம் வெளியீட்டு விழா சென்னை அடையாறில் உள்ள ஒடிசி புக் செண்டரில் நடைபெற்றது.இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் மோகன் ராஜா கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் மோகன் ராஜா,

“Once upon an IAS exam” என்ற இந்த புத்தகம் பல தரப்பு மக்களுக்குமானது.அவரின் கதை நம்மில் பலருக்கு பொருந்த கூடியனவாக இருக்கிறது.அதற்காக எழுத்தாளர் விஜய் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் அவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த புத்தகம் நம்மை ஊக்கப்படுத்தக் கூடிய ஒரு புத்தகம்.ஐ.ஏ.எஸ் பணி என்பது மிகவும் உன்னதமானது.ஒரு மருத்துவர் சமுதாயத்துக்கு புரியும் சேவையை போல,ஐ.ஏ.எஸ் அதிகாரியாக சேவை புரிந்து தற்போது தனது எழுத்து மூலம் சமுதாயத்துக்கு சேவை புரிய வந்திருக்கிறார்.அவர் மிகச்சிறப்பான ஒரு வேலையை செய்திருக்கிறார்.இந்த மாதிரியான புத்தகங்கள் நமக்கு வெற்றிக்கான வழியை அடையாளம் காண உதவுகின்றன”.

இவ்விழாவில் பேசிய புத்தகத்தின் ஆசிரியர் டாக்டர் விஜய கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்,

“சமூக உணர்வு உடைய ஒரு சில இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் மோகன்ராஜா.இந்த புத்தகத்தை அறிமுகப்படுத்த அவர் வந்திருப்பது மகிழ்ச்சி.நான் தொடர்ந்து புத்தகங்களை எழுதுவேன் அவை நிச்சயம் சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.இந்த புத்தகத்தை வெளியிடுவதற்கு உறுதுணையாக இருந்த ஒடிஸிக்கு நன்றி.இந்த புத்தகம் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதும் 25 வயது இளைஞரின் வாழ்க்கையை சுற்றி நடக்கும் காமெடி,உணர்வுகள் மற்றும் திடுக்கிடும் திருப்பங்களை உள்ளடக்கிய ஒரு கலவையாகும்”என கூறினார்.

மேலும் படிக்க