• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க உயிர் தன்னார்வ அமைப்பு தொடக்கம்

October 27, 2018 தண்டோரா குழு

இந்தியாவிலேயே முதல் முறையாக கோவையில் முக்கிய பிரமுகர்கள்,முதன்மை நிறுவனங்கள்,உள்ளூர் அமைப்புகள்,கல்வி நிறுவனங்கள் ஆகியவை இணைந்து சாலை விபத்துக்களை தவிர்க்க மக்களிடம் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த ‘உயிர் ‘ என்ற தன்னார்வ அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.இதன் தொடக்க விழா கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட முதலமைச்சர் பழனிசாமி,உயிர் அறக்கட்டளை அமைப்பினை தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய முதல்வர் பழனிச்சாமி,

“ஹெல்மெட்,சீட் பெல்ட்டுகள் அணிவதை தவறாமல் பின்பற்ற வேண்டும்.விதிகளை மதிக்காமல் வாகனங்களை இயக்குவதே சாலை விபத்துக்கு காரணம்.சாலை விபத்தை தடுக்க புதுமையான திட்டத்தை உயிர் அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளது.வாகன ஓட்டிகள் தங்களது பொறுப்பை உணர்ந்தால் விபத்தில்லா மாநிலமாக உருவாக்க முடியும்.விபத்து தொடர்பாக உயிர் என்ற அமைப்பு மூலம் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்று நம்புகிறேன்.

108 ஆம்புலன்ஸ் இலவச சேவை தமிழகத்தில் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.ஆம்புலன்ஸ் சேவையால் 4.60 லட்சம் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது. ஜிபிஎஸ் கருவியை பயன்படுத்துவதற்காக 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு ஆன்ட்ராய்டு செல்போன் தரப்பட்டுள்ளது.விபத்தில்லா நாட்டினை உருவாக்க அரசுடன் மக்களும் ஒத்துழைக்க வேண்டும்.விபத்து பற்றி குறும்படங்களை வெளியிடுதல்,விழிப்புணர்வு ஏற்படுத்த தன்னார்வ அமைப்புகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சாலை விபத்துகளை தடுக்க 272 ரோந்து வாகனங்கள் நெடுஞ்சாலைகளை கண்காணித்து வருகிறது.தமிழகம் முழுவதும் இதுவரை 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நெடுஞ்சாலை விபத்துகளில் காப்பாற்றப்பட்டுள்ளனர்.விபத்து மற்றும் அவசர கால பாதுகாப்பு திட்டம் மூலம்,சிகிச்சைக்கான காலத்தை குறைத்து உயிரிழப்பை தடுத்து வருகிறோம்.தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் விபத்து சிகிச்சை மையங்கள் விரிவுபடுத்தப்படும்”.இவ்வாறு பேசினார்.

மேலும் படிக்க