October 2, 2018
தண்டோரா குழு
காந்தி ஜெயந்தி,காமராஜர் நினைவு தினத்தை முன்னிட்டு கோவை உருமாண்டம்பாளையம் அரசு துவக்கப்பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டம் முன்னாள் மாணவர்களால் இன்று முதல் துவங்கப்பட்டுள்ளது.
பள்ளியில் பயிலும் மாணவர்களின் நலன் கருதியும்,மாணவர்களின் சேர்க்கையை அதிகப்படுத்தும் வகையிலும் மகாத்மா காந்தியின் 15௦வது பிறந்தநாள் மற்றும் காமராஜர் நினைவு தினம் மற்றும் காமராஜரின் மதிய உணவுத்திட்டம்,எம்.ஜி.ஆரின் சத்துணவுத்திட்டத்தை கருத்தில் கொண்டு இந்த திட்டத்தை செயல்படுத்த முன்வந்ததாக பள்ளியின் முன்னாள் மாணவர்கள் கூறுகின்றனர்.
இத்திட்டத்திற்கு ஊர் மக்களும் பங்களிக்கும் வகையில் ஆண்டுதோறும் 12 மாதங்களில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒருவர் காலை உணவு வழங்கும் திட்டத்தின் பொறுப்பை எடுத்துக்கொண்டு செய்யவுள்ளதாகவும்,காலை உணவு சுகாதார முறையில் தயாரிக்கப்படும் முட்டை,பால்,சப்பாத்தி,இட்லி,சாம்பார்,சட்னி போன்ற உணவுகள் பரிமாறவுள்ளது.மேலும், இந்த பள்ளியில் திருவள்ளுவர் சிலை வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக கூறுகின்றனர்.