January 22, 2018
தண்டோரா குழு
திருப்பூரில் பேருந்து கட்டண உயர்வைக்கண்டித்து கல்லூரி மாணவர்கள் இன்று(ஜன 22) சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
திருப்பூரில் பேருந்து கட்டண உயர்வைக்கண்டித்து கல்லூரி மாணவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.இந்த சாலைமறியல் போராட்டத்திற்கு பொதுமக்களும் ஆதரவு கொடுத்ததால் பெருமளவு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கடந்த 2 தினங்களுக்கு முன் தமிழக அரசு பேருந்து கட்டணத்தை 40 சதவிகிதத்திற்கும் அதிகமாக உயர்த்தியது.இந்த பேருந்து கட்டண உயர்வுக்கு அனைத்து தரப்பு மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று(ஜன 22) காலை கல்லூரிகளுக்கு செல்ல வந்த மாணவர்கள் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை கண்டித்து திருப்பூர் புதிய பேருந்து நிலையம் முன்பாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி மாணவர்களால் தொடங்கபட்ட இந்த போராட்டத்திற்கு பொதுமக்களும் ஆதரவு கொடுத்ததால் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதனால் திருப்பூர் பெருமாநல்லூர் சாலையில் பெருமளவு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக நடைப்பெற்ற இந்த போராட்டத்தில் திருப்பூர் வடக்கு தாசில்தார் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் போராட்டத்தை கைவிடாத மாணவர்கள் புதிய பேருந்து நிலையத்தின் உட்புறம் அமர்ந்து தமிழக அரசின் இலவச பேருந்து பயண அட்டையினை 30 கி.மீ என்பதனை 60 கி.மீ ஆக மாற்ற வேண்டும் என தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.