July 26, 2018
தண்டோரா குழு
கோவையில் சாலை பாதுகாப்பு மற்றும் விதிமுறைகள் குறித்து பள்ளி,கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள ஆடியோவை கோவை மாநகர காவல்துறை ஆணையர் பெரியய்யா வெளியிட்டார்.
கோவையை சேர்ந்த சேகர் என்பவர்,இந்த ஆடியோவிற்கான பாடல் வரிகள் எழுதி பாடியுள்ளார். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியை தவிர்க்க வேண்டும்,வேகமாக வாகனத்தை இயக்கக்கூடாது,குடிபோதையில் வாகனம் ஓட்டக்கூடாது போன்ற போக்குவரத்து விதிமுறைகள் அடங்கிய வரிகள் கொண்ட இந்த ஆடியோ 5நிமிட 23 நொடிகளுக்கு உருவாக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே,கடந்த 3ஆண்டுகளுக்கு முன்பு சாலை பாதுகாப்பு குறித்து வீடியோ வெளியிட்டுள்ள நிலையில் தற்போது ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது.கோவை மாவட்ட மக்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆடியோவை,கல்லூரி,பள்ளி மாணவர்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளது. மேலும்,இந்த ஆடியோவை கொண்டு வீடியோவும் தயாராகி வருகிறது.சாலை விபத்துகளை தடுக்க மாநகர காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதன் ஒரு பகுதியாக இந்த ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது.