January 29, 2018
தண்டோரா குழு
கோவையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ் ஆர் எம் யு வினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ரயில்வே ஊழியர்களுக்கு புதிய பென்சன் திட்டத்தை உறுதி செய்யப்பட்ட பென்சனாக உடனே மாற்றி அமைத்திட வேண்டும், பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ் ஆர் எம் யுவினர் கோவை ரயில் நிலையம் முன்பாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்பாட்டத்தில் எஸ் ஆர் எம் யு வின் சேலம் கோட்டத்தில் வேலை செய்பவர்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக உயிரை பணயம் வைத்து வேலை செய்யக் கூடியவர்களுக்கு சிறப்பு சலுகை தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்து கோஷங்களை எழுப்பினர். மேலும் மத்திய அரசு தங்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றாவிட்டால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்தனர்.