• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை சவுரிபாளையத்தில் தீ விபத்து

November 23, 2017

கோவை சவுரிபாளையம் பகுதியில் மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியத்தால் குப்பையில் வைத்த தீ பரவி அருகே இருந்த வீட்டின் வாசிங் மெசின் இயந்திரத்தில் தீபற்றியது.

கோவை சவுரிபாளையம் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் குப்பைதொட்டிகள் வைக்காததால் கிருஷ்ணநகர் பகுதியில் குடியிருக்கும் மக்கள்,குப்பைகளை அருகே உள்ள தனியார் அடுக்கு மாடிக்குடியிருப்பு அருகே கொட்டப்படுகிறது. இதனால் நோய்தொற்று ஏற்படுவதோடு அடிக்கடி தீ பற்ற வைப்பதால் அருகே உள்ள வீடுகளில் தீ விபத்து ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது.

இந்நிலையில் இன்று காலை லதா என்பவர் பணிக்கு சென்றபின் குப்பையில் வைக்கப்பட்ட தீ, வீட்டின் வெளியே வைக்கப்பட்டிருந்த வாசிங்மெசினில் பற்றி எரிந்தது.இதைக்கண்ட அப்பகுதியினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர் .இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,

இப்பகுதியில் தொடர்ந்து குப்பைகள் கொட்டி வருவதால் அதனை அகற்றக்கோரி மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தால், அதனை எடுக்கவீட்டுக்கு 300 ரூபாய் வீதம் லஞ்சம் கேட்கின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன் தமிழக கவர்னர்ப பன்வாரிலால் புரோகித் வந்த போது,சுத்தம் செய்த ஒரு சில பகுதிகளை காண்பித்தனர், ஆனால் அவர் ஆய்வுசெய்த இடத்திற்கு பக்கத்தில் உள்ள இடத்தின் நிலை தான் இப்படி தான் இருக்கிறது.உனடியாக இந்த பகுதிகளில் ஆங்காங்கே குப்பைத்தொட்டிகள் அமைக்க வேண்டும்.லஞ்சம் கேட்ட அதிகாரி மீதுநடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க