• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அனைவருக்கும் வீடு என்ற புதிய திட்டம் அறிமுகம்

January 24, 2018 தண்டோரா குழு

கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அனைவருக்கும் வீடு என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய மாநில அரசுகளின் கனவுத் திட்டங்களில் ஒன்றான ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தமிழகத்தில் 12 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அதன் படி மத்திய அரசின் அறிவிப்பில் தமிழகத்தில் சென்னை,கோவை உட்பட 12 நகரங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கோவை ஸ்மார்ட் சிட்டி என்ற திட்டத்தில் தனியார் நிறுவனங்களும் பல்வேறு விதமான பங்களிப்புகளை அளித்து வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக கோவை டவுன் சிட்டி டெவலப்பர்ஸ் அனைவருக்கும் வீடு என்ற புதிய திட்டத்திற்கான துவக்க விழா கோவையில் நடைபெற்றது.

இவ்விழாவில் பேசிய இயக்குனர்கள்,கிருத்திகா விக்ரம்,மற்றும் சஞ்சனா விஜயகுமார் அனைத்து விதமான வசதிகளை உள்ளடக்கிய இந்த ஸமார்ட்சிட்டி அடுக்குமாடி குடியிருப்புகளை சாதாரண மக்களும் பிரதம மந்திரி கடன் திட்டத்தில் வீடு வாங்கும் வசதியை எங்களது நிறுவனம் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் படிக்க