• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மீண்டும் கோவைக்கு வருமா சைக்கிள் திட்டம்

November 19, 2018 தண்டோரா குழு

கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை நோக்கு நகர்ந்து கொண்டு இருக்கிறது. ந்நிலையில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சைக்கிள்கள் கொண்டு வர திட்டமிடப்பட்டது.இதனையடுத்து சீனா நிறுவனம் அனா ஓபோ’ என்ற சைக்கிள் நிறுவனம் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமல்படுத்தியது.

சோதனை அடிப்படையில் முதல் ஒரு மாதம் இலவசமாகவும் அதன் பின்பு குறைந்த வாடகையிலும் சைக்கிள்கள் விடப்பட்டன.ஆனால் வாடகைக்கு சைக்கிள் எடுத்த பெரும்பாலானவர்கள் அவற்றை திருப்பி கொண்டு வரவில்லை குறிப்பபிட்ட சில பகுதிக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்ட இந்த சைக்கிளளை அனைத்து இடத்திற்கும் எடுத்து சென்றனர்.மேலும்,பல சைக்கிள்கள் உடைக்கப்பட்டன.இந்த ஓபோ சைக்கிள்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு இருந்தாலும் அதை வாடகைக்கு எடுத்துச் செல்பவர்கள் உடைத்துவிட்டனர்.இதனால் அந்த நிறுவனம் வாடகைக்கு சைக்கிள் விடும் திட்டத்தை ரத்து செய்து விட்டு கோவையை விட்டு வெளியேறியது.

இந்நிலையில் தற்போது கோவையில் வாடகைக்கு சைக்கிள் விடும் திட்டத்தை கொண்டு வர பெங்களூருவை தலைமையிடமாக கொண்டுள்ள ஒரு தனியார் நிறுவனம் முன்வந்துள்ளது

இந்த திட்டத்தை முதல் கட்டமாக வடவள்ளி பகுதியில் அமல்படுத்த அந்த நிறுவனம் திட்டமிட்டது.அந்த பகுதியில் எத்தனை பேர் சைக்கிள்களை வாடகைக்கு எடுப்பார்கள் வாடகை எவ்வளவு நிர்ணயிக்கலாம் என்பது பற்றி அந்த தனியார் நிறுவனம் ஆய்வு நடத்தியது.ஆனால் அங்கு வாடகைக்கு சைக்கிள்களை விடும் திட்டத்தை அமல்படுத்த அந்த நிறுவனம் தற்போது தயக்கம் காட்டி வருகிறது.

வாடகைக்கு சைக்கிள்களை எடுத்து செல்பவர்கள் அவற்றை திருப்பி கொண்டு வராமல் இருந்தாலோ உடைத்து விட்டாலோ அந்த இழப்புக்கான பொறுப்பை கோவை மாநகராட்சி நிர்வாகம் அல்லது கோவை மாநகர போலீஸ் நிர்வாகம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அந்த நிறுவனம் நிபந்தனை விதித்தது.அதனால் அது நடைமுறைக்கு சாத்தியமில்லை என்பதால் கோவை மாநகராட்சி ஒப்புக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.இதைத் தொடர்ந்து கோவையில் வாடகை சைக்கிள் திட்டத்தை அமல்படுத்த தனியார் நிறுவனம் தயக்கம் காட்டி வருகிறது.

இது குறித்து கோவை மாநகராட்சி அதிகாரி கூறியதாவது:-

“பெங்களூருவை தலைமையிடமாக கொண்டுள்ள தனியார் நிறுவனம் முதல் கட்டமாக 500 சைக்கிள்களை வாடகைக்கு விட திட்டமிட்டிருந்தது. பின்பு மக்களின் தேவையை கருத்தில் கொண்டு அதை 5 ஆயிரம் சைக்கிள்களாக உயர்த்தவும் அந்த நிறுவனம் திட்டமிட்டிருந்தது.ஆனால் அந்த சைக்கிள்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு இருந்தாலும் அதை வாடகைக்கு எடுத்துச் செல்பவர்கள் அகற்றி விடுகிறார்கள். அப்படி தான் ஆர்.எஸ்.புரத்தில் வாடகை சைக்கிள்களில் பொருத்தப்பட்ட ஜி.பி.எஸ். கருவிகள் அகற்றப்பட்டு உடைக்கப்பட்டன.

‘ஓபோ’ சைக்கிள் நிறுவனத்துக்கு ஏற்பட்ட சம்பவத்தை கேள்விப்பட்டு புதிய நிறுவனம் தொலைந்து போகும் சைக்கிள்களுக்கு கோவை மாநகராட்சி நிர்வாகம் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று கேட்டது.பெங்களூரு,ஐதராபாத் நகரங்களில் விடப்பட்ட வாடகை சைக்கிள் திட்டத்திற்கான நிதியை அந்தந்த மாநகராட்சி நிர்வாகங்கள் தான் ஏற்றுக் கொள்கின்றன.ஆனால் அங்கும் தற்போது சைக்கிள்கள் திருட்டுபோவதாக கூறப்படுகிறது.

கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வாடகை சைக்கிள் விடும் திட்டத்துக்கு மாநகராட்சி நிதி ஒதுக்க முடியாது.தனியார் நிறுவனங்கள் அதற்கான நிதியை ஏற்க வேண்டும் என்று கூறினார்.

கோவையில் 20 லட்சத்துக்கும் மேல் மக்கள் வாழ்கின்றனர்.கோவையில் எங்கு செல்ல வேண்டும் என்றாலும் அதிகம் பஸ்சில் தன் போக வேண்டிய சூழல் உள்ளது.அதனால் இங்கு உள்ள மக்கள் பெரும்பாலும் தனி நபர் வாகனத்தை பயன்படுத்துகின்றனர்.இதனால் இங்கு காற்று மாசு ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது எனவே இதனை குறைக்கவும் கட்டு படுத்தவும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சைக்கிள் உபயோகத்தை கோவையில் கொண்டு வந்தனர்.ஆனால் மக்கள் அலட்சியத்தால் ‘ஓபோ’ நிறுவனம் கோவையை விட்டு வெளியேறியது.

‘ஓபோ’ சைக்கிள் நிறுவனத்துக்கு ஏற்பட்ட சம்பவத்தை கேள்விப்பட்டு அந்த தனியார் சைக்கிள் நிறுவனம் கோவையில் சைக்கிள் வசதியை அமைக்க யோசிக்கின்றது”.இவ்வாறு கூறினார்.

மேலும் படிக்க