August 30, 2018
தண்டோரா குழு
இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கை தேசிய புலனாய்வு முகமை(என்.ஐ.எ) அதிகாரிகள் கடந்த 7 மாதமாக விசாரித்து வந்த நிலையில் இன்று கோவை சாய்பாபா காலனி பகுதியில் ஹசன் என்பவருடைய பூட்டி இருந்த வீட்டில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கோவையில் கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் சுப்பிரமணியபாளையம் பகுதியில் மரம் நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.இது தொடர்பாக 8 தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.ஆனால் கொலையாளி தொடர்பாக எந்த துப்பும் கிடைக்காததையடுத்து செப்டம்பர் 27ம் தேதி இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
இதில் இவ்வழக்கில் கோவை சாய்பா பாகலனி பகுதியை சேர்ந்த சதாம் உசேன் மற்றும் முபாரக் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.மேலும் இவர்களை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூபாய் 2 லட்சம் சன்மானம் வழங்கப்படும் எனவும் காவல்துறை சார்பாக அறிவிக்கப்பட்டது.
இவ்வழக்கு தொடர்பாக அபுதாகிர்,சதாம் என்பவர் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமினில் உள்ளனர்.மேலும் முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்ட முபாரக்,சபையர் ஆகியோர் சட்ட விரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் உள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகள் மேற்கொண்டதின் அடிப்படையில்,இந்த கொலை வழக்கின் பின்னணியில் பல்வேறு தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது.இதனையடுத்து இவ்வழக்கினை தேசிய புலனாய்வு முகமைக்கு கடந்த பிப்ரவரி முதல் தேதியில் மாற்றப்பட்டது.
கடந்த 7 மாதங்களாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இன்று கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ அலுவலகத்தில் இருந்து எஸ்.பி தலைமையிலான அதிகாரிகள் குழு இன்று கோவை வந்தனர்.இவர்கள் சசிக்குமார் கொலை வழக்கு தொடர்பாக கோவை மாநகர காவல்துறையினர் உதவியுடன் சாய்பாபா காலனி பகுதியில் உள்ள முன்னா என்பவருடைய பூட்டியிருந்த வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஹசன் தனது மனைவி மற்றும் பெற்றோர் ஷாஜகானுடன் வசித்து வந்துள்ளார்.ஹசன் குடும்பத்துடன் துபாயில் உள்ள தனது சகோதரி வீட்டில் உள்ளதாகவும்,அவரது பெற்றோர் சென்னையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் ஹசனின் தந்தைக்கு சொந்தமான துடியலூர் பகுதியில் உள்ள மரக்கடையிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர்.சசிக்குமார் கொலை வழக்கு தொடர்பாக வெளிநாட்டில் உள்ள முன்னாவை அழைத்திருந்தாகவும்,ஆனால் வெளிநாட்டில் உள்ளதால் முன்னா வர மறுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் முன்னா மற்றும் அவரது குடும்பத்தினர் கோவையில் கடந்த மூன்று மாதங்களாக இல்லாததால் இன்று திடீரென பூட்டி இருந்த வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.