January 26, 2018
தண்டோரா குழு
கோவை மாவட்ட நிர்வாகம் சார்பாக 69 வது குடியரசு தின விழா கோவை வ.ஊ.சி மைதானத்தில் நடைபெற்றது.
கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற 69 வது குடியரசு தின விழாவில்,மொத்தம் 453 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 78 லட்சத்து 88 ஆயிரத்து 640 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்த குடியரசுதின விழாவில் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.பின்னர் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து 453 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 78 லட்சத்து 88 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். போலீஸ் மற்றும் அரசின் பிற துறைகளில் சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு விருது,பரிசுகள் வழங்கப்பட்டன.