October 8, 2018
தண்டோரா குழு
கோவையில் அரசு உதவிப்பெரும் பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரி முதல்வர் நியமனத்தை ரத்து செய்ய வலியுறுத்தி அக்கல்லூரி பேராசிரியர்கள் இன்று கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை அவினாசி சாலையில் சிட்ரா அருகிலுள்ள அரசு உதவிப்பெரும் பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரி வளாகம் முன்பு அரசு ஊதியம் பெரும் பேராசிரியர்கள் இந்த ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது,யு.ஜி.சி., மத்திய மனிதவள மேம்பாட்டு ஆணையம்,தமிழ்நாடு தனியார் கல்லூரி ஒழுங்குமுறை சட்டம் ஆகிய விதிமுறைகள் மீறி பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லூரி முதல்வர் கடந்த மே மாதம் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த நியமனத்திற்கு அனுமதி வழங்க முடியாது என கடந்த மாதம் 14 ஆம் தேதி பாரதியார் பல்கலைக்கழகம் அறிக்கை விடுத்தும் அதன்மீது எந்த நடவடிக்கை எடுக்காமல் தொடர்ந்து முதல்வர் பதவியில் நீடிப்பதை கண்டித்து இந்த ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக பேராசிரியர்கள் தெரிவித்தனர்.
மேலும்,கடந்த மாதம் கருப்பு பேட்ஜ் அணிந்தும்,கல்லூரி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியும் பேச்சுவாரத்தைக்கு கல்லூரி நிர்வாகம் வர மறுப்பதாகவும், தொடர்ந்து ஆசிரியர் விரோதப்போக்கை கடைபிடித்தால் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்றும் ஆர்பாத்தில் ஈடுபட்ட பேராசிரியர்கள் தெரிவித்தனர்.இந்த ஆர்ப்பாட்டத்தின் போது,கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது.