• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை அருகே வழி தெரியாமல் பள்ளி சுற்று சுவற்றை உடைத்த காட்டு யானைகள்

November 30, 2018 தண்டோரா குழு

கோவை துடியலூரை அடுத்த பன்னிமடை பகுதியில் அதிகாலை புகுந்த காட்டு யானைகள் அரசு பள்ளியில் ஒரு பகுதி சுற்றுச் சுவற்றை உடைத்து உள்ளே புகுந்து மற்றொரு பகுதியில் இருந்த சுற்றுச் சுவரை உடைத்துக் கொண்டு வெளியேறிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை துடியலூரை அடுத்த பன்னிமடை பகுதியில் நேற்று இரவு 3 யானைகள் கொண்ட காட்டு யானைகள் கூட்டம் வந்துள்ளது.இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அதிகாலை 3 மணியளவில் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டபோது பன்னிமடை அரசு பள்ளியின் ஒரு பகுதி சுற்றுச் சுவரை உடைத்துக் கொண்டு பள்ளி வளாகத்திற்குள் புகுந்தது.

உள்ளே புகுந்த காட்டு யானைகள் வெளியே செல்ல வழியில்லாமல் பள்ளியின் மற்றொரு புறம் இருந்த சுற்றுச் சுவற்றை உடைத்துக் கொண்டு வெளியேறியது. இதில் பள்ளியின் இரு இடங்களில் சுற்றுச் சுவர் சுமார் 20 அடி அகலத்திற்கு சேதமடைந்துள்ளது.பள்ளி சுற்றுச் சுவர் என்பதால் இரவில் சமூக விரோதிகள் உள்ளே புகாமல் இருக்க விரைவில் சீர் செய்ய வேண்டும் எனவும்,குடியிறுப்பு பகுதிகள் காட்டு யானைகள் வராமல் தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்,காட்டு யானைகளை விரட்ட முதுமலை மற்றும் சாடிவயல் யானைகள் முகாம்களில் இருந்து கொண்டுவரப்பட்ட 4 கும்கி யானைகள் பன்னிமடை அருகிலேயே நிறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க