• Download mobile app
08 Feb 2026, SundayEdition - 3651
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் வரும் 18-ம் தேதி உலக தெலுங்கு கூட்டமைப்பின் 25வது ஆண்டுவிழா

November 15, 2018 தண்டோரா குழு

கோவையில் நடைபெற உள்ள உலக தெலுங்கு கூட்டமைப்பின் 25 வது ஆண்டு விழாவில் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தெலுங்கு சமுதாயத்தினர் பலர் கலந்துக் கொள்ளவுள்ளனர்.

இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் வசிக்கும் அனைத்து தெலுங்கு சமுதாயத்தினரையும் இணைக்கும் விதமாக கடந்த பல ஆண்டுகளாக உலக தெலுங்கு கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது.இந்த அமைப்பின் 25 வது ஆண்டு விழா கோவையில் வரும் 18 ம்தேதி நடைபெற உள்ளது.இது குறித்து உலக தெலுங்கு கூட்டமைப்பின் கோவை மண்டல நிர்வாகிகள் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய கோவை மண்டல தலைவர் ரமா விஜயகுமார்,

“அரசியல் மற்றும் பல்வேறு பிரிவுகளை கடந்து உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தெலுங்கு சமுதாயத்தினர் இந்த விழாவில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய கிருஷணகோபால் மற்றும் ரவிக்குமார்,இந்த விழாவில் தெலுங்கு சமுதாய மக்களின் பெருமைகளை கூறும் இசைநிகழ்ச்சிகள், கலை,நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாகவும்,மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்க உள்ளதாக தெரிவித்தனர்”.

மேலும் படிக்க