May 12, 2018
தண்டோரா குழு
கோவை ஹெச்.சி.எல் நிறுவன அறக்கட்டளை சார்பில் பெரு நிருவனங்களின் சமூக பொறுப்புணர்வை திறம்பட மேம்படுத்தும் என்.ஜி.ஒ திறன் வளர்ப்பு கருத்தரங்கம் நேற்று நடைப்பெற்றது.
இந்த கருத்தரங்கில் ஹெச்.சி.எல் அறக்கட்டளை சார்பாக சுகாதாரம்,சுற்றுச் சுழல், கல்வி வாழ்வாதாரம் குறித்து நடத்தப்பட்ட பல்வேறு அமர்வுகளில் என்.ஜி.ஒ.,க்களுக்கு உள்ள அனுபவங்கள் மற்றும் சவால்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன.தற்போது கிராமப்புற வளர்ச்சியில் கவனம் செலுத்தும் விதமாக சுகாதாரம்,சுற்றுச் சுழல்,கல்வி ஆகிய துறைகளில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது.
இதுகுறித்து ஹெச்.சி.எல் அறக்கட்டளை இயக்குநர் நிதி புண்டிர் கூறுகையில்,
“எங்கள் அமைப்பு சார்பில் அகில இந்திய அளவில் தொடர்ச்சியாக நடைப்பெறும் ஆறாவது நிகழ்வாகும்.இந்த கருத்தரங்கு மூலம் நாம் தொலைதூர கிராமப்புற இடங்களில் பணியாற்றும் எண்ணற்ற தொண்டு நிறுவனங்கள் மற்றும் அவர்களின் தொலைநோக்கு திட்டங்களை விரைந்து செயலாற்ற உதவும்” என்றார்.
இந்நிலையில்,பின்தங்கிய நிலையில் உள்ள கிராமங்களில் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு பணியாற்றும் அரசு சாரா நிறுவனத்தை தேர்வு செய்து அவற்றுக்கு விருது வழங்க ஹெச்.சி.எல் அறக்கட்டளை முடிவு செய்துள்ளது.
மேலும்,இதற்காக தேர்ந்தெடுக்கப்படவுள்ள என்.ஜி.ஒ.,க்கள் சிறந்த நீதிபதி குழுவால் வெளிப்படையான நடவடடிக்கைகள் மூலம் தேர்வு செய்யப்படவுள்ளன.இதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும்.