• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் காவலர் அருங்காட்சியகம் முதல்வர் திறப்பு

May 17, 2018 தண்டோரா குழு

கோவையில் புதுப்பிக்கட்ட காவலர் அருங்காட்சியகத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று(மே 17)திறந்து வைத்தார்.

கோவை ரயில் நிலையம் எதிரே,எஃப்.ஏ.ஹாமில்டன் எனும் ஆங்கிலேயே காவல் துறை அதிகாரியால் 1918-ஆம் ஆண்டு 3,488 சதுர அடியில் ஹாமில்டன் போலீஸ் கிளப் கட்டப்பட்டது.இதில்,16 அறைகள்,டேபிள் டென்னிஸ் அரங்கம், நூலகம்,சமையல் அறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இருந்தன. இதனிடையே கடந்த சில ஆண்டுகளாக இந்தக் கட்டடம் போதிய பராமரிப்பு இல்லாமல் பாழடைந்து கிடந்தது.

அதைத்தொடர்ந்து,கோவை மாநகரக் காவல் ஆணையராக இருந்த அ.அமல்ராஜ் ஹாமில்டன் கிளப்பை 2016-ஆம் ஆண்டு புனரமைத்து, காவலர் அருங்காட்சியகமாக மாற்றத் திட்டமிட்டார். அதன்படி,இதற்கான பணிகள் ரூ. 60 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வந்தன.தற்போது,காவலர் அருங்காட்சியகத்தின் புனரமைப்புப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன.

இந்நிலையில் இன்று கோவை வந்த முதல்வர் அருங்காட்சியகத்தை பொது மக்களின் பயன்பாட்டுக்காகத் திறந்து வைத்தார்.இவ்விழாவில் அமைச்சர் வேலுமணி டி்ஜி்பி ராஜேந்திரன்,கோவை மாநகர் காவல் துறை ஆணையர் பெரியய்யா உட்பட காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர்,

“இது வரலாற்று சிறப்பு மிக்க அருங்காட்சியகம் எனவும்,அந்த காலத்தில் இருந்து தற்போது வரை காவல்துறையில் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் இங்கு காட்சிபடுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.144 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டிடம்,பழமை மாறாமல் புதுபிக்கப்பட்டு காவல்துறையில் பயன்படுத்திய துப்பாக்கி,வாள் சீருடைகள் மிக சிறந்த முறையில் அனைத்தும் வைக்கப்பட்டுள்ளது.மாணவர்கள் இளைஞர்களின் அறிவு பூர்வமாக திறன்மேம்படுத்தும் வகையில் இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது.

மேலும்,கோவையில் இரவு தங்கி செல்லும் விமானத்திற்கு அரசு எரிபொருள் வரி சலுகை வழங்கி உள்ளது.இதனால்,பல்வேறு பெரிய நகரங்களுக்கு கோவையில் இருந்து விமானம் இயக்கம்படும் என தெரிவித்தார்”.

இந்த அருங்காட்சியகத்தில்,காவலர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள்,சீருடைகள்,மலையூர் மம்பட்டியான்,சந்தனக் கடத்தல் வீரப்பன் ஆகியோர் பயன்படுத்திய துப்பாக்கிகள்,பீரங்கிகள், ஏவுகணைகள்,நீர் மூழ்கிக் கப்பல் போன்ற பல்வேறு அரிய பொருள்கள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க