• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் முதல் முறையாக கீரைக்கு இணையதளம்!….

December 6, 2017 தண்டோரா குழு

கோவையில் முதல் முறையாக கீரை விற்பனை செய்ய இணையதளம் துவங்கப்பட்டுள்ளது.

தமிழ் நாட்டிலேயே கோவையில் சாய்பாபா காலனியில் முதல் முறையாக கீரை விற்பனை செய்ய தனி ஷோரூம் ஆரம்பிக்கப்பட்டு, கீரைக்கடை.காம்(/keeraikadai.com) என்ற இணையதளம் துவங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்த இணையதளத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீராம் பிரசாத் கூறுகையில்,

“தற்போது 5 முதல் 8 வகையான கீரைகள் மட்டுமே நமக்கு பயன்பாட்டுக்கு கிடைக்கின்றன.ஆனால் இங்கு நாங்கள் 40 வகையான கீரைகளை விற்பனை செய்ய உள்ளோம்.

கீரைகளைஎங்களதுசொந்தபண்ணையில்மட்டுமின்றி,இருகூர்,சித்ரா,தொண்டாமுத்தூர் மற்றும் பொள்ளாச்சி ஆகிய இடங்களிலிருந்து நேரடியாக விற்பனைக்கு பெறுகிறோம். விற்பனை செய்ய 2 மணி நேரத்திற்கு முன் இந்த கீரைகள் அறுவடை செய்யப்படுகிறது.

இங்கு கிடைக்கும் கீரைகள் முற்றிலும் இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி வளர்க்கப்படுகின்றன.இது தவிர பஞ்சகாவ்யா,ஜீவாமிர்தம், உள்ளிட்ட இயற்கை திரவியங்கள் பயன்படுத்துகின்றன.

மேலும்,ரத்த அழுத்தம்,சர்க்கரை நோய்,இருதய பிரச்சனைகள்,கண் பிரச்சனை,நரம்பியல் மற்றும் மறதி போன்றவைகளை கட்டுக்குள் வைக்க பல வகையான கீரைகள் இங்கு உள்ளது.இதுமட்டுமின்றி கீரையின் மருத்துவ குணங்கள் பற்றி எங்களது செயலியில் அளித்துளோம்.

உங்களுக்கு தேவையான கீரைகளை கீரைக்கடை.காம்(keeraikadai.com)என்ற இணையதளம் மூலமாகவும், கீரைக்கடை ஆப்களை ஆன்ட்ராய்ட் மற்றும் ஐபோன்களில் பதிவிறக்கம் செய்தும் ஆர்டர் செய்யலாம். விவசாயிகளையும்,தொழில்நுட்பத்தையும் இணைப்பதாக இந்த கீரைக்கடை.காம் கண்டிப்பாக இருக்கும்.

மேலும்,அடுத்த ஓராண்டுக்குள் ஒவ்வொரு பின்கோடு பகுதியிலும்,ஒரு கீரைகடை துவங்க திட்டமிட்டுள்ளதாகவும்,சென்னை மற்றும் பெங்களூர் விரிவாக்க செய்ய உள்ளோம்.
கீரை பற்றியும் அவற்றின் பயன்கள் பற்றி மக்களிடையே விளக்க இந்த திட்டம் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்”.இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க