May 15, 2018
தண்டோரா குழு
இலங்கை இனபடுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த கோரி,கோவையில் கே.எப்.சி. நிறுவனத்தை முற்றுகையிட முயன்ற தமிழர் விடியல் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 2009 ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற தமிழின படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தக் கோரி,மே மாதத்தை போராட்ட மாதமாக தமிழர் விடியல் கட்சியினர் அனுசரித்து வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக கோவை – அவிநாசி சாலையில் உள்ள அமெரிக்க நிறுவனமான கே.எப்.சி.யினை முற்றுகையிட முயன்றனர்.
மேலும்,இனப்படுகொலையில் இந்தியா,அமெரிக்கா நாடுகளுக்கும் பங்கு இருப்பதாகவும், இந்நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் அக்கட்சியினர் தெரிவித்தனர்.இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 26 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.