Advertorial
இரட்டை இலை கிடைக்க எஸ்.பி.வேலுமணி தான் காரணம் என கோவையில் ஒட்டப்பட்ட போஸ்டரால் கட்சி மேலிடத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின் அதிமுக ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என இரண்டாக பிரிந்தது. அதன் பின்னர் சசிகலா சிறைக்கு சென்ற அதிமுக ஓபிஎஸ். ஈபிஎஸ், தினகரன் அணி மூன்றாக பிரிந்தது. இதனால் தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முடக்கியது.
அதன்பின் ஓபிஎஸ். ஈபிஎஸ் அணிகள் ஒன்றிணைந்தது. இதற்கிடையில், கடந்த 24ம் தேதி முதல்வர் பழனிசாமி – துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.
இந்நிலையில், அதிமுக அதிகார மையத்தில் முக்கிய பங்கு வகிக்கும் கோவை மாவட்டத்தை சேர்ந்தவரும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சருமான எஸ்.பி. வேலுமணியை புகழ்ந்து கோவை மாவட்டத்தில் முக்கிய இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
மாநில இளைஞர் இளம்பெண்கள் பாசறை துணைச்செயலாளர் விஷ்ணு பிரபு சார்பில்ஓட்டப்பட்டுள்ள அந்த போஸ்டரில்,
இரட்டை இலை துளிர்ந்தது
காரணம்
அணிகள் இணைந்தது
காரணம்
எஸ்பி வேலுமணி அவர்களின் முயற்சியால்
வெற்றி! வெற்றி ! வெற்றி ! என்று எழுதப்பட்டுள்ளது.இந்த போஸ்டர் விவகாரம் கட்சி மேலிடத்தில் பெரும் சர்ச்சைஏற்படுத்தியுள்ளதாம்.
இது குறித்து விஷ்ணுபிரபுவிடம் கேட்டபோது,
பிரிந்த இரண்டு அணிகளை ஒன்றிணைப்பது என்பது சாதாரண விஷயமல்ல.அம்மாவால் முதலமைச்சராகப்பட்ட ஓ.பன்னீர்செல்வதிற்கு துணை முதல்வர் பதவி கொடுத்து அவரை மீண்டும் அணியில் இணைப்பதற்கே தனி திறமை வேண்டும்.அது எங்கள் அண்ணன்எஸ்.பி.வேலுமணியிடம் உள்ளது. அணிகளை இணைக்க அவர் பட்ட கஷ்டங்களை சொன்னால் மிகையாகாது. அணிகள் இணைந்ததால் தான் தற்போது இரட்டை இலை சின்னம் கிடைத்துள்ளது. அதனால் தான் எல்லாவற்றிற்கும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தான் காரணம் என்று சொன்னேன். இது மக்களுக்கு தெரியவைக்கவே போஸ்டரும் அடித்தேன் என்றார்.
சிறுமுகை பகுதியில் திருட்டு நடைபெறுவதை தடுத்த காவலர்களுக்கு கோவை எஸ்.பி பாராட்டு
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 41 மனுக்கள் மீது சுமூகமான முறையில் தீர்வு
கோவை உப்பிலிபாளையத்தில் கேலக்ஸி ஹெல்த் எஜுகேஷன் அக்குபஞ்சர் யோகா கிளினிக் பட்டமளிப்பு விழா
கோவையில் மே 28 முதல் துவங்குகிறது ஆண்கள் மற்றும் பெண்களுக்கான அகில இந்தியக் கூடைப்பந்து போட்டிகள்
கனடாவில் சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’ வழங்கப்பட்டது
கோவை வேளாண்மை பல்கலைகழகத்தில் 1995ம் ஆண்டு பேட்ஜ் மாணவர்கள் 25 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சந்திப்பு