• Download mobile app
01 May 2024, WednesdayEdition - 3003
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் கால்வாய்கள் தூர்வாராததால் வீடுகளுக்குள் புகுந்த நீர்

May 11, 2018 தண்டோரா குழு

கோடை வெயில் அதிகரித்து அக்னி நட்சத்திரம் துவங்கிய நிலையில் கடந்த சில நாட்களாக கோவையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்து வந்தது.இதன் காரணமாக கோவை சுற்றியுள்ள கிருஷ்ணாம்பதி,செல்வாம்பதி,முத்தன்னகுளம்,செல்வசிந்தாமணி மற்றும் சிங்காநல்லூர் குளம் ஆகிய 5 குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்து குளங்கள் நிரம்பும் நிலையில் உள்ளது.

இந்நிலையில் கோவை சிறுவாணி சாலை செல்வபுரம் பகுதியிலுள்ள செல்வ சிந்தாமணி குளம் நிரம்பி உடையும் அபாயம் ஏற்பட்டது. இதனையடுத்து பொதுப்பணி துறை அதிகாரிகள் முன்னறிவிப்பின்றி குளத்தின் ஷட்டரினை திறந்து விட்டனர்.

இதனால் செல்வபுரம் பகுதியிலிருந்து உக்கடம் பெரிய குளத்திற்கு செல்லும் கால்வாயில் உள்ள அடைப்பினை அதிகாரிகள் சரி செய்தனர். இருப்பினும் அப்பகுதியிலுள்ள அசோக் நகர்,மற்றும் சேத்துமாவாய்க்கால் போன்ற பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் புகுந்தது.இது தொடர்பாக பொதுமக்கள் கூறும்போது கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருவதால் குளங்கள் நிரம்பியுள்ளது எனவும்,ஆனால் அதிகாரிகள் முன்னறிவிப்பில்லாமல் தண்ணீரை திறந்து விட்டதால் குடியிருப்பு பகுதியில் நீர் புகுந்ததாகவும் அரசு சரிவர கால்வாய்களை துர்வாரப்படாதே இது போன்ற நிலை ஏற்பட காரணம் என குற்றம் சாட்டினர்.

மேலும்,சேத்துமாவாய்க்கால் பகுதியில் கடந்த 10 வருட காலமாக சிலை தொழில் செய்து வரும் தொழிற்கூடங்களில் வெள்ளநீர் புகுந்து சேதம் ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்தனர்.

மேலும் படிக்க