• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஒரே நாளில் 530 மில்லி மீட்டர் மழை பதிவு

August 14, 2018 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் சூழலில்,ஒரே நாளில் 530 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது.

தென்மேற்கு பருவமழை தொடர்ந்து வரும் நிலையில் கோவை மாவட்டம் முழுவதும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.கோவையில் திருச்சி சாலை,அவினாசி சாலை,காந்திபுரம்,சூலூர், உள்ளிட்ட மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் காலை முதல் மழை பெய்து வருகிறது.

கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 530 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது.குறிப்பாக அதிகபட்சமாக சின்னகல்லாறு பகுதியில் 170 மில்லி மீட்டர் மழையும்,குறைந்த பட்சமாக பீளமேடு பகுதியில் 1 மில்லி மீட்டர் மழையளவும் பதிவாகி உள்ளது.

மேலும் சிறுவாணி அணையின்,மொத்த கொள்ளவான 49.53 அடியில்,தற்போது 47.82 அடி உள்ளது.மழை தொடர்ந்தால் இந்த வருடம் மீண்டும் சிறுவாணி அணை நிரம்ப வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.கோவை குற்றால அருவியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கோவை குற்றால அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தொடர்ந்து தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க