July 27, 2018
தண்டோரா குழு
கோவையை சேர்ந்த முதல்நிலை காவலர் ஒருவர்,மனநலம் பாதிக்கப்பட்டவரை சுத்தப்படுத்தி புத்தாடை அணிவித்த சம்பவம் மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
செல்வபுரம் காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணிபுரிபவர் பிரதீப்.இவர் பேரூர் ரோடு வாய்க்காப்பாலம் அருகே உள்ள சோதனைச்சாவடி அருகே பணியில் இருந்த போது,மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் அப்பகுதியில் சுற்றி திரிந்துள்ளார்.அந்த நபரை தனது பணியின் இடையில் நல்ல முறையில் சுத்தம் செய்து புத்தாடை அணிவித்து அனுப்பி வைத்துள்ளார்.
அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.காவலர் பிரதீப்பின் இந்த செயல்பாடு பாராட்டும் வண்ணம் அமைந்துள்ளது.முதன் முறையாக காவலர் ஒருவர் மனநோயாளிக்கு முடிதிருத்தம் செய்து அவரை சுத்தப்படுத்தி புத்தாடை வழங்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.