• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை அரசு மருத்துவமனையில் 3 குழந்தைகள் உட்பட 8 பேர் பன்றி காய்ச்சலுக்கு அனுமதி

October 30, 2018 தண்டோரா குழு

கோவை அரசு மருத்துவமனையில் 3 குழந்தைகள் உட்பட 8 பேர் பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை டீன் அசோகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கோவை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை டீன் அசோகன்,

“கோவை அரசு மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக மொத்தம் 57 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.3 குழந்தைகள் உட்பட 8 பேருக்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு அவர்கள் தனிவார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.டெங்கு காய்ச்சல் காரணமாக 1 குழந்தை உட்பட 5 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.

மேலும்,தனியார் மருத்துவமனையில் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பலனளிக்காத இறுதி நேரத்தில் அரசு மருத்துவமனைக்கு அனுப்புவதால் அவர்களை காப்பாற்றுவதில் சிக்கல் ஏற்படுகின்றது.பன்றி காய்ச்சலுக்கான பரிசோதனைகள் கோவை அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.

மருத்துவமனையில் தேவையான டாமி பூளு மாத்திரைகள் கையிருப்பில் இருப்பதாக தெரிவித்த அவர்,டெங்கு,பன்றி காய்ச்சல் காரணமாக உயிரிழப்பு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.காய்ச்சல் மேலும் காய்ச்சல் பரவுவது குறித்து பள்ளி மாணவர்கள்,பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும்,கடந்த காலத்தை விட டெங்கு காய்ச்சல் பரவல் குறைவாகவே இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்”.

மேலும் படிக்க