• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் குண்டு வெடிப்பு கைதியின் திருமணத்திற்கு வந்த 5 பேர் ஊபா சட்டத்தின் கீழ் கைது

September 3, 2018 தண்டோரா குழு

கோவையில் நேற்று நடைபெற்ற குண்டு வெடிப்பு கைதி முகமது ஆஜம் திருமணத்திற்கு வந்த 5 பேர் இந்து தலைவர்களை கொல்ல சதித்திட்டம் தீட்டியுள்ளதால் ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஓரு மாத பாரோலில் சிறையில் இருந்து வெளியே வந்த முஹம்மது ஆஜம்மிற்கு நேற்று காலை கோவை போத்தனூரில் திருமணம் நடைபெற்றது.இந்த திருமணத்தில் கலந்துக் கொள்ள சென்னையை சேர்ந்த ஜாபர்,இஸ்மாயில்,சம்சூதீன்,சலாவுதீன் மற்றும் கோவையை சேர்ந்த ஆசிக் ஆகிய 5 பேர் வந்துள்ளனர். இவர்கள் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்,அன்பு மாரி,இந்து முன்னணி மாநில பேச்சாளர் மூகாம்பிகை மணி ஆகியோரை கொலை செய்யும் திட்டத்துடன் வந்திருந்ததாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கோவை ரயில் நிலையத்தில் வைத்து இந்த 5 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.

மத்திய உளவு பிரிவு போலீசாரும்,எஸ்.ஐ.யூ போலீசாரும் இவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையின் அடிப்படையில் இரண்டு பேர் தேசிய லீக் கட்சியையும், ஒருவர் எஸ்டிபிஐ கட்சியையும் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.மேலும் இந்து தலைவர்கள் மூன்று பேரையும் கோவையில் வைத்து அரிவாளாள் வெட்டி படுகொலை செய்ய திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.இதனையடுத்து இந்த 5 பேர் மீதும் ஊபா உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதனைத்தொடர்ந்து கோவை மாவட்ட விரைவு நீதிமன்ற நீதிபதி சுப்புலட்சுமி முன்பாக 5 பேரையும் காவல் துறையினர் ஆஜர்படுத்தினர்.இந்த 5 பேரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் கோவை மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்திரவிட்டதை அடுத்து அவர்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் படிக்க