கோவையைச் சேர்ந்த 6 பட்டதாரிகள் OLA மற்றும் UBER டாக்ஸி நிறுவங்களுக்கு போட்டியாக, புதிய டாக்ஸி சேவையை தொடங்கவுள்ளனர்.
கோவை ஹிந்துஸ்தான் பொறியியல் கல்லூரியை சேர்ந்த 6 பட்டதாரிகள் ஒன்று சேர்ந்து, “MyDriverz” என்னும் புதிய டாக்ஸி சேவையை தொடங்கவுள்ளனர்.இந்த டாக்ஸி சேவையை OLA மற்றும் UBER ஆகியவை நிறுவனகளுக்கு கடுமையான போட்டியை விளங்க வாய்ப்பு உண்டு.
சமீபத்தில், தனியார் டாக்ஸி நிறுவனத்தின் டாக்ஸி டிரைவர்கள் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டங்கள், நியாயமான கட்டணத்தில், மக்களுக்கு சிறந்த சேவை வழங்க “MyDriverz” தொடங்க இந்த இளம் பட்டதாரிகளை தூண்டியது.
“OLA” மற்றும் “UBER” டாக்ஸி சேவை நிறுவங்கள்,வாடிக்கையாளர்களிடம் இருந்து அதிக கட்டணம் வசூல் செய்கிறார்கள்.எனவே,கமிஷன் வாங்காத டாக்சி சேவை ஆப்பை உருவாக்க முடிவு செய்தோம். டாக்ஸி ஓட்டுனர்களுக்கு கிடைக்கும் ஒவ்வொரு சவாரிக்கும், எந்த கமிஷனும் வசூலிக்கப்படமாட்டாது.
ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்படும்.மேலும் டாக்ஸி ஓட்டுனர்கள், அந்த குறிப்பிட்ட தொகையை மட்டும் நிறுவனத்திற்கு செலுத்தவேண்டும். தற்போது ஆட்டோ ரிக்க்ஷாவின் ஓட்டுநர்கள், ஒவ்வொரு மாதத்திற்கு 700 ரூபாயும், டாக்ஸி ஓட்டுனர்கள் 1,000 ரூபாயும் செலுத்தவேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஓட்டுனர்களுக்கு அடையாள அட்டைகள்,மற்றும் Zero Balance Bank Account இருக்கும்.
“MyDriverz” டாக்ஸி சேவையில் நிலையான கட்டணம் இருக்கும்.கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படமாட்டாது.மேலும்,ஆட்டோரிக்ஷா மற்றும் டாக்ஸிகளுக்கு அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்கள் குறித்து நாங்கள் ஓட்டுனர்களுடன் கலந்துரையாடிய பிறகு முடிவெடுக்கப்பட்ட கட்டணங்கள் இருக்கும் என்று நிர்வாக இயக்குனர் என். வரதராஜன் தெரிவித்துள்ளார்.
மேலும்,இந்த பட்டத்தாரிகள் “Lakshmi People Service” என்ற நிறுவனத்தை தொடங்கி பள்ளி மேலாண்மை பயன்பாடு மென்பொருள் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.இந்த மென்பொருளை ரூ15,000க்கு பள்ளிகளுக்கு விற்பனை செய்தார்கள்.தற்போது,இந்த மென்பொருள் சேலம் நகரிலுள்ள சுமார் 120 பள்ளிகளில் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பு:0422-2253666, 7299336436 இந்த தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்களது வாகனங்களை “MyDriverz”இணைத்துக் கொள்ளலாம்.
கோவையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் இரண்டாவது புதிய புதிய ஸ்டோர் திறப்பு !
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், ஊர் கேப்ஸ் இணைந்து தமிழ்நாட்டில் 500 மின்சார மூன்று சக்கர வாகனங்களை களமிறங்குகின்றன!
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்