May 10, 2018
தண்டோரா குழு
கோவை மாவட்டம் முழுவதும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.கோவை மாவட்டத்தில் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் இன்று மாலை முதலே மேக மூட்டத்துடன் காணப்பட்டது.இதனையடுத்து மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.இதனால் பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.தொடர்ந்து கோவை மாநகரின் காந்திபுரம்,அவினாசி சாலை,சிங்கநல்லலூர்,ராமநாதபுரம் உள்ளிட்ட மாநகரப் பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.இதனால் மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காலநிலை ஏற்பட்டுள்ளது.கோவையில் அக்னி நட்சத்திர வெயில் துவங்கியது முதலே வெயிலின் தாக்கம் குறைவாகவும்,பலத்த மழை பெய்து வருவதாலும்,கோடை காலம் என்ற சூழல் இல்லாத நிலையில் தற்போது உள்ளது.