• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு இடையே மோதல் – ஒருவர் பலி

November 22, 2018 தண்டோரா குழு

கோவையை அடுத்த மலுமிச்சம்பட்டியில் உள்ள ஹிந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டு வந்துள்ளது.இதில் இரண்டாம் ஆண்டு படித்துவரும் குளித்தலையை சேர்ந்த அஷ்ரப் முகமது அலி என்ற மாணவனை முதலாம் ஆண்டு மாணவர்களான ரோஜர் டைட்டஸ்,ரஜோ தபோபிக்,பாரதி ஆகியோர் சேர்ந்து கத்தியால் குத்தியுள்ளனர்.இதில் படுகாயமடைந்த மாணவனை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இச்சம்பவத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் மூவரையும் போத்தனூர் செட்டிபாளையம் காவல்துறையினர் கைது செய்தனர்.முதல் கட்ட விசாரணையில் முன் விரோதம் காரணமாக கொலை செய்தது தெரியவந்தது.

இந்த மோதல் காட்சியானது தற்போது வெளியான திமிரு பிடுச்சவன் திரைப்படத்தில் உள்ள காட்சிகள் போல் சிறு வயதில் குற்றம் செய்வோர்களுக்கு தண்டனை குறைவு என்ற கோணத்தில் கல்லூரி மாணவர்கள் கொலை செய்ததாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க