May 14, 2018
தண்டோரா குழு
ஜெட்லீ புக் ஆப் ரெக்கார்டு 2018 க்கான விருதை கோவையை சோ்ந்த மழழை செல்வங்களான யஷ்ஸஸ்வினி(6) மற்றும் சம்யுக்தா(5) தட்டிச்சென்றனா்.
தென்காசியில் உலக சாதனை, 2018 க்கான நிகழ்வு கடந்த ஏப்ரல் 15ம் தேதி நடைபெற்றது.அதில் ஜெட்லீ புக் ஆப் ரெக்கார்டுக்காக கோவை அவானி பப்ளிக் பள்ளியில் UKG படிக்கும் யஷ்ஸஸ்வினி இந்திய வரை படத்தில் 3000 வண்ணநிற பந்துகளை (10*6 feet) 40 நிமிடங்களில் நிரப்பி ரெக்கார்டு படைத்துள்ளார்.
அதே பள்ளியில் படிக்கும் சம்யுக்தா குழந்தையை காப்போம் என்ற தலைப்பில் தனது வலது கை அச்சினை 30 feet நீளம் உள்ள துணியில் 29 நிமிடங்களில் முடித்து சாதனை படைத்துள்ளார்.இந்த குழந்தைகளை கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் மற்றும் கோவை மருத்துவ கல்லூரி டீனும் கெளரவித்தனா்.