August 27, 2018
தண்டோரா குழு
சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற நபரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
கோவையை அடுத்த,GN மில்ஸ் பகுதியில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட முயன்ற நபரை பொதுமக்கள் பிடித்து அடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.
கோவையை அடுத்த GN மில்ஸ் பகுதியில் உள்ள சுப்ரமணியபாளையம் பகுதியில்,சாலையில் பெண் ஒருவர் நடந்து சென்று உள்ளார்.அப்போது அதே பகுதியில் இரு சக்கர வாகனத்தில் வந்த நபர்,அந்த பெண்ணின் நகையை பறிக்க முயன்று உள்ளார். உடனடியாக,அப்பகுதியில் இருந்த பொதுமக்கள்,அனைவரும் அவரை மடக்கி பிடித்தனர்.
பின்னர் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் ஒன்று கூடி அவரை அடித்துள்ளனர்.அப்போது அவர் மது போதையில் இருந்தது தெரிய வந்தது.பின்னர் அந்த நபரின் இரு கைகளையும் கட்டி வைத்து,காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.பின்னர் காவல்துறையினர் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.விசாரணையில் அவர் பெருமாநல்லூரை சேர்ந்த சுரேஷ் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து காவல் துறையினர்,அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.