• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிறைத்துறையில் உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

December 22, 2017

கோயம்புத்தூர் மாவட்ட மத்திய சிறையின் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மத்திய சிறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மத்திய சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் அவர்கள் கூறுகையில்,

கோயம்புத்தூர் மத்திய சிறையில் பல்வேறு பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் உள்ளன. உற்பத்தி பிரிவில் காலியாக உள்ள மின்கம்பியாளர் (WireMan) 2 காலிபணியிடங்களும், நெசவு பணியாளர் 1 காலிபணியிடமும், நெசவியல் வல்லுநர் 1 காலிபணியிடமும், தையல் போதகர் (Tailoring Instructor) 2,
காலிபணியிடங்கள் என மொத்தம் 6 காலிபணியிடங்கள் நிரப்பவதற்கு நேர்காணல் நடைப்பெறவுள்ளது.

மேலும்,மின் கம்பியாளர் பணியிடத்திற்கு பிற்படுத்தப்பட்டோர் வகுப்பைச் சேர்ந்தவர்கள்,இதர வகுப்பைச் சார்ந்தவர்களும்,தையல் பணியிடத்திற்கு ஆதிதிராவிடர்,அருந்ததியினர் இதர வகுப்பைச்
சேர்ந்தவர்களும் நெசவு பணியாளர்,நெசவியல் வல்லுநர் பணியிடத்திற்கு அனைத்து பிரிவினரும் விண்ணப்பிக்கலாம்.

நெசவியல் வல்லுநர் பணியிடம் நிரப்புவது தொடர்பாக 8.01.2018 அன்றும்,நெசவுப் பணியாளர் பணியிடம் நிரப்புவது தொடர்பாக 9.01.2018 அன்றும்,தையல் போதகர் பணியிடம் நிரப்புவது தொடர்பாக 11.01.2018 அன்றும்,மின்கம்பியாளர் பணியிடம் நிரப்புவது தொடர்பாக 12.01.2018 அன்றும் அனைத்து காலி பணியிடங்களுக்கும் அந்தந்த நாட்களில் காலை 11 மணியளவிலும்
நேர்காணல் நடைபெறவுள்ளது.

இந்த நேர்காணலில் கல்வித் தகுதி சான்றிதழ், சாதிச் சான்றிதழ்,தொழிற்கல்வி சான்றிதழ், முன்அனுபவம் சான்றிதழ் மற்றும் முன்னுரிமைச் சான்றிதழ்களுடன் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு மேற்கண்ட நாட்களில் சிறைகண்காணிப்பாளர் அவர்கள் முன்னிலையில் நடைபெறும் எனக் கூறினார்.

மேலும் படிக்க