January 22, 2018
தண்டோரா குழு
கோவையில் பேருந்து கட்டணத்திற்கு எதிராக வாக்கு சேகரிக்கும் போராட்டம் இன்று
(ஜன 22)நடைப்பெற்றது.
கோவையில் பேருந்து கட்டணம் குறித்து பொதுமக்களின் எதிர்ப்பை நேரடியாக அவர்களிடம் வாக்கு சேகரிப்பில் மாதர் சங்கத்தினர் ஈடுபட்டு போராட்டம் நடத்தினர்.
தமிழக அரசு உயர்த்தி உள்ள பேருந்து கட்டண உயர்வுக்கு தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்நிலையில் பொதுமக்களின் எதிர்ப்பை பெறும் வகையில் மாதர் சங்கத்தினர் அரசுக்கு எதிராக வாக்குகள் சேகரிக்கும் பெரும் இயக்கத்தை துவக்கி உள்ளனர்.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பாக வாக்கு பெட்டி மற்றும் வாக்கு சீட்டுகளுடன் நியாயம் மற்றும் அநியாயம் என இரண்டு பெட்டிகளில் பொதுமக்களை வாக்களிக்க வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேருந்துகளின் இருந்து இறங்கும் பயணிகளிடம் இந்த வாக்கு சீட்டுகளை அளித்து அந்த பெட்டியில் தங்களது கருத்தை போட வலியுறுத்துகின்றனர். இந்த வாக்குகளை பெற்று அதனை தமிழக அரசுக்கு அனுப்ப உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.
மேலும், தமிழகம் முழுவதும் இதுபோன்று பொதுமக்களிடம் வாக்குகளை பெற உள்ளதாக கூறி உள்ளனர். பேருந்து கட்டண உயர்வுக்கு பெரும்பாலும் அநியாயம் என்றே வாக்களித்த உள்ளதாக மாதர் சங்கத்தினர் தெரிவித்தனர்.