• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

2019ல் கோவை பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க நிச்சயம் வெற்றி பெறும் – கார்வேந்தன்

July 31, 2018 தண்டோரா குழு

பாராளுமன்ற தேர்தலில் கடந்த முறை பா.ஜ.க தோல்விக்கு தொண்டர்களின் வேலைபாடு குறைவாக இருந்திருக்கலாம் என முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் கார்வேந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் முக்கிய நிர்வாகிகள் அனைத்து சட்டமன்ற தொகுதிகளில் சுற்றுபயணம் மேற்கொண்டு வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக கோவை மாநகர பா.ஜ.க நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் இன்று கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

கோவை நகர் மன்றதிற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளின் மாநில பொறுப்பாளர் கட்டளை ஜோதி,ஆற்காடு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன்,பழனி தொகுதி முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் முன்னாள் சேர்மன் கார்வேந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் கார்வேந்தன்,

“2019ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு தமிழக பாரதிய ஜனதா கட்சி தேர்தலுக்கான அடித்தள வேலைகளை ஆரம்பித்து உள்ளதாகவும்,தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் கூட்டம் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

கோவை பாராளுமன்ற தொகுதி பா.ஜ.க வசம் இருந்ததாகவும் சூழலின் காரணமாக இத்தொகுதியை இழக்க நேரிட்டதாக தெரிவித்தார்.வரும் 2019ல் கோவை பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க நிச்சயம் வெற்றி பெறும்.

கோவை மாநகரில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளதாகவும்,போக்குவரத்து பாதிக்க கூடிய சாலை,மக்களின் வாழ்வாதாரமான குடிநீர் பிரச்சனை தவிர்க்க முடியாத பிரச்சனையாக உள்ளது என்றார்.

வீடுகளுக்கு வரி என்பது 100% உயர்த்தபட்டுள்ளது.இது சாமானியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கபட்டுள்ளதாகவும்,கோவையில் உள்ள மேம்பால பணிகள் முழுமை பெறவில்லை எனவும் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

பொதுமக்கள் பிரச்சனைகள் தொடர்பாக பா.ஜ.க சார்பில் பல்வேறு மனுக்கள் அளித்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை என குற்றம் சாட்டியவர் நிரந்தர தீர்வு காணாவிட்டால் பாரதிய ஜனதா கட்சி போராட்டங்களில் ஈடுபடும் என தெரிவித்தார்.

கடந்த முறை பாராளுமன்ற தேர்தலில் தோல்விக்கு தொண்டர்களின் வேலைபாடு குறைவாக இருந்திருக்கலாம் அல்லது மக்கள் சிந்தனைகள் வேறு மாதிரி இருந்திருக்கலாம்.இப்போது மக்கள் பா.ஜ.க வெற்றி பெற வேண்டும் என்ற மன நிலையில் உள்ளனர்.

தன்னலமில்லாத தலைவர் பிரதமர் மோடி எனவும்,அவரை மக்கள் மனமாற ஏற்றுக் கொண்டு உள்ளதால் வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க அமோக வெற்றி பெறும் என்றார்”.

மேலும்,சூயஸ் நிறுவனத்திடம் கோவை மாநகராட்சி ஒப்பந்தம் செய்துள்ளதை தொடர்பான கேள்விக்கு இதனை கண்டித்து பா.ஜ.க சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருவதாகவும்,இன்று மாலை சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகில் பல்வேறு மக்கள் பிரச்சனைகள் தொடர்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் படிக்க