• Download mobile app
25 Sep 2026, FridayEdition - 3880
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்கள் மீண்டுவர சிறப்பு தொழுகை

August 22, 2018 தண்டோரா குழு

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கோவையில் ஆயிரக்கணக்கனோர் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டதோடு,மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவிட நிதி திரட்டி வருகின்றனர்.

இஸ்லாமியர்கள் தியாக திருநாளாக பக்ரீத் பண்டிகையை இன்று நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக கோவையிலும் பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகைகள் நடத்தப்பட்டது.கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் 10ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்ட சிறப்பு தொழுகை நடைபெற்றது.

அப்போது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்கள் மீண்டு வர வேண்டுமென தொழுகை நடத்தப்பட்டது.மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கவும் நிதி திரப்பப்பட்டது.இல்லாதவர்களுக்கு உதவிடுவதை நோக்கமாக கொண்ட தியாக நிருநாளான பக்ரீத் பண்டிகையில் கேரள மக்களுக்கு உதவிடும் வகையில் உதவிகளை செய்து வருவதாகவும்,பாதிக்கப்பட்டவர்கள் மீண்டு வர தொழுகை நடத்தியதாகவும் அவ்வமைப்பினர் தெரிவித்தனர்.தொடர்ந்து இனிப்புகளை வழங்கியும்,ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.உணவுகளை மூன்று பகுதியாக பிரித்து ஒன்றை குடும்பத்திற்கும்,மற்றதை உறவினருக்கும், ஏழைகளுக்கும் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

மேலும் படிக்க