• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

May 12, 2018 தண்டோரா குழு

கோவையில் உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு இன்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்தியா முழுவதும் உலக செவிலியர் தினத்தையொட்டியும் உலக செவிலியர்களின் தாயான நைட்டிங்கேல் அம்மையாரின் பிறந்த தினத்தையொட்டியும் இன்று பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக கோவையில் உள்ள நைட்டிங்கேல் கல்லூரி மாணவ மாணவிகள் செவிலியர்களின் சமூக மற்றும் மருத்துவ சேவை குறித்து பாதைகள் ஏந்தியபடி விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

இதனை கோவை மாவட்ட துணை ஆட்சியர் ராஜ்குமார் கொடி அசைத்து துவங்கி வைத்தார். குழந்தைகள் நல மருத்துவமனை முதுநிலை கண்காணிப்பாளர் மகிலா டேனியல் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இப்பேரணியானது அரசு பெண்கள் பாலிடெக்னிக் முதல் வஉசி பூங்கா வரை சென்று முடிவடைந்தது.இதில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பேரணியாக கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க