August 13, 2018
தண்டோரா குழு
திமுக தலைவர் கருணாநிதியின்,மறைவிற்கு கோவையை சேர்ந்த அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பினர் இன்று அஞ்சலி செலுத்தினர்.
தமிழக முன்னாள் முதல்வரும்,திமுகவின் தலைவருமான கருணாநிதி,கடந்த 7ம் தேதி,உடல்நலக் குறைவால் காலமானார்.இதனையடுத்து சென்னை மெரினாவில் கருணாநிதி நினைவிடத்தில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள்,முக்கிய பிரபலங்கள்,திரையுலகத்தினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில்,கோவையை அடுத்த ராஜவீதி பகுதியில்,அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் இன்று கருணாநிதியின் புகைப்படத்தை வைத்து அஞ்சலி செலுத்தினர். இதில் அனைத்து ஆட்டோ ஓட்டுநர்களும்,மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.இந்த அஞ்சலி நிகழ்ச்சியில், சிஐடியு,எல்பிஎப்,தேமுதிக, ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் கலந்துக் கொண்டனர்.