August 27, 2018
தண்டோரா குழு
ஆட்டோ ஓட்டுனர்களிடையே மோதலை உருவாக்கும் விதமாக புதிய ஆட்டோக்களை ஸ்டாண்டில் நிறுத்தக்கூடாதவாறு நடவடிக்கை எடுக்க கோரி ஆட்டோ ஓட்டுனர்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவையை அடுத்த காளப்பட்டி பகுதியில் உள்ள ஆட்டோ நிறுத்தத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் தங்களது ஆட்டோக்களை நிறுத்தி வருகின்றனர்.இந்நிலையில் வழக்கமாக இருக்கும் ஆட்கள் அல்லாது வெளியாட்கள் பலர் இந்த ஆட்டோ நிறுத்தத்தில் வந்து,இடையூறு செய்வதாக கூறப்படுகிறது.இதனால் ஓட்டுனர்கள் மத்தியில் தகராறு ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இதனால் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு மோதல் ஏற்படுத்தும்,வெளியாட்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்டோ ஓட்டுனர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.மேலும் புதிய வாகனங்களை ஆட்டோ நிறுத்தத்தில் நிறுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டாம் எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.