January 29, 2018
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் மதுபானம் மற்றும் கள்ளச்சாராயம் குறித்து மரக்கால் ஆட்டம் , கரகாட்டம் ஆடி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மதுபானம் மற்றும் கள்ளச்சாராயம் காரணமாக பல்வேறு நோய்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு அது குறித்து தமிழக அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மரக்கால் ஆட்டம் மற்றும் கரகாட்டம் ஆடி பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இந்நிகழ்ச்சியை கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் துவக்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியின் போது பாட்டு பாட மதுவின் தீமை குறித்து எடுத்துரைத்தனர்.மேலும், இன்று முதல் ஒரு வாரத்திற்கு கோவை மாவட்டம் முழுவதும் 60 க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஈடுபட உள்ளனர்.