• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைகழக புதிய துணைவேந்தராக பேராசிரியர் குமார் பதவியேற்பு

November 16, 2018 தண்டோரா குழு

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைகழக புதிய துணை வேந்தராக பேராசிரியர் குமார் இன்று பதவி ஏற்றுக் கொண்டார்.

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பதவி காலியாக இருந்த நிலையில்,புதிய துணைவேந்தரை தேடும் பணி நடந்த வந்தது.இதில் பத்து பேர் முதற்கட்டமாக பரிந்துரைக்கப்பட்டனர்.இதையடுத்து,கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தின் புதிய துணைவேந்தராக குமார் நியமனம் செய்யப்பட்டார்.இதற்கான உத்தரவை பல்கலக்கழக வேந்தரும்,தமிழக ஆளுனருமான பன்வாரிலால் புரோகித் பிறப்பித்தார்.

இந்நிலையில்,கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தின் புதிய துணைவேந்தராக குமார் பதவி ஏற்றுக் கொண்டார்.இவர் ஏற்கனவே தோட்டக்கலைத்துறையில் 22 ஆண்டுகளாக பணி அனுபவம் பெற்றவர்.அதே துறையில் டீனாகும் பணிபுரிந்தவர்.மேலும், வேளாண்மைத்துறையில் பதினெட்டு ஆராய்ச்சிக் கட்டுரைகளும் எட்டுக்கும் மேற்பட்ட புத்தகங்களையும் பிரசுரம் செய்தவர்.இவர் 3 ஆண்டு காலம் துணை வேந்தராக பதவி வகிப்பார்.

மேலும் படிக்க