August 3, 2018
தண்டோரா குழு
விசாரணையின் போது காவல் துறை அதிகாரிகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தியது தொடர்பாக மனித உரிமை ஆணையம்,மகளிர் ஆணையம் ஆகியவற்றில் புகார் அளித்துள்ளதாக நடிகை ஸ்ருதி தெரிவித்துள்ளார்.
கோவையில் இளைஞர்களை திருமணம் செய்து கொள்வதாக கூறி மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ஸ்ருதி,நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.இந்நிலையில் 3வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட்ட பின்பு,செய்தியாளர்களுக்கு ஸ்ருதி பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர்,
“தனக்கு தொடர்ந்து காவல் துறையினர் மிரட்டல் விடுத்து வருகின்றனர்.விசாரணையின் போது காவல்துறை அதிகாரிகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தியது தொடர்பாக மனித உரிமை ஆணையம், மகளிர் ஆணையம் ஆகியவற்றில் புகார் அனுப்பியுள்ளதாகவும்,அந்த ஆணையங்களிடம் ஆதாரங்களை கொடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அடையாளம் தெரியாத எண்களில் இருந்து பலர் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து
வருகின்றனர்.தன்னை கடத்தி கற்பழித்து விடுவோம் என மிரட்டல்கள் வருகின்றன எனவும் கூறிய அவர்,தொடர் மிரட்டல்களால் வெளியே நடமாட பயமாக உள்ளதாக தெரிவித்தார்.லண்டனில் படிக்க செலுத்திய 23 லட்ச ரூபாய் பணத்தை காவல் துறையினர் முடக்க முயற்சிப்பதாகவும், இந்த வழக்கை சட்டப்படி நீதிமன்றத்தில் சந்திக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்”.